விஜய் மாநாட்டை ஆர்வமுடன் வீட்டிலிருந்து பார்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

விஜய் மாநாட்டை ஆர்வமுடன் வீட்டிலிருந்து பார்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
Updated on
1 min read

புதுச்சேரி: விஜய் மாநாட்டை ஆர்வமுடன் முதல்வர் ரங்கசாமி தனது வீட்டில் இருந்து பார்த்தார்.

புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ்- பாஜக இடம்பெற்றுள்ள ஆட்சி நடக்கிறது. இதன் தலைவராக முதல்வர் ரங்கசாமி உள்ளார். அவரது நண்பரான ஆனந்த் மூலம் நடிகர் விஜய்யை ரங்கசாமி ஏற்கெனவே சந்தித்துள்ளார். விஜய் கட்சி தொடங்கியதற்கு அவர் வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.

விஜய் மாநாட்டு பேனர்களில் விஜயுடன் முதல்வர் ரங்கசாமி இருக்கும் புகைப்படங்களும் இடம் பெற்றிருந்தன. விருப்பமானவர்கள் தனது புகைப்படத்தை அச்சிடுவதாக முதல்வர் ரங்கசாமி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி விஜய் மாநாட்டு விவரங்களை கேட்டறிந்தப்படி இருந்தார். இந்நிலையில் விஜய் மாநாடு ஒளிபரப்பை தனது வீட்டில் இருந்து முதல்வர் ரங்கசாமி முழுவதும் பார்த்தார். ஆனந்த் வருகை உள்ளிட்ட விவரங்கள் தொடர்பாக தனது கருத்துகளை தெரிவித்தப்படி முழுவதும் பார்த்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in