‘தவெக இருமொழி கொள்கையை பின்பற்றுகிறது’ - விக்கிரவாண்டி மாநாட்டில் அறிவிப்பு

விஜய்
விஜய்
Updated on
1 min read

விழுப்புரம்: தவெக இருமொழி கொள்கையை பின்பற்றுகிறது என அக்கட்சியின் முதல் மாநில மாநாட்டில் அறிவிக்கப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்துள்ள வி.சாலையில் ‘வெற்றி கொள்கை திருவிழா’ என்ற பெயரில் இன்று மாலை நடைபெற்றது. மாலை 3 மணிக்கு தொடங்கிய மாநாட்டில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து மாலை 4 .03க்கு மேடைக்கு வந்த கட்சியின் தலைவர் விஜய் மேடைக்கு உற்சாகமாக வந்து தொண்டர்களைப் பார்த்து கையசைத்தார்.பின்னர் 800 மீட்டர் நீளமுள்ள ரேம்பில் நடந்துவந்தார். பின்னர் ரிமோட் மூலம் 100 அடி உயர கொடி கம்பத்தில் கட்சி கொடியேற்றிவைத்தார்.

கட்சியின் கொள்கைகளை பேராசிரியர் சம்பத்குமார் அறிவித்து பேசியதாவது: `பிறப்புக்கும் எல்லா உயிர்க்கும்’ என்பது எங்களின் கோட்பாடாகும். தமிழக மக்களின் தனிமனித, சமூக, பொருளாதாரத்தை உருவாக்குவது நம் குறிக்கோளாகும். ஜனநாயகம் ஒரு நாட்டின் மக்களை சாதி, மதம் என பாகுபடுத்தாமல் அவர்களின் உரிமைகளை நிலைநாட்டுவதாகும்.

விகிதாச்சார பங்கீடு அடிப்படையில் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும். பாலின சமத்துவம், மதச்சார்பின்மை, மாநில தன்னாட்சியே அம்மாநில மக்களின் உரிமையை மீட்பதே நம் கொள்கை. தவெக இருமொழி கொள்கையை பின்பற்றுகிறது. தமிழ்வழி கல்வியில் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும். எங்கும் அரசியல் தலையீடு அற்ற நிலையை உருவாக்குவோம். சுற்றுசூழல், இயற்கை வளங்களை பாதுகாப்பது. திண்டாமை ஒழிப்பு, போதை இல்லா தமிழகம், இதுவே நம் கொள்கையாகும். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து கட்சியின் செயல்திட்டங்களை கேத்ரின் பாண்டியன் கூறியது, நிர்வாக சீர்திருத்தம் வேண்டும். அரசு, தனியார் நிறுவனங்களில் அரசியல் தலையீடு இருக்காமல் வழிவகுக்கப்படும். அரசு நிர்வாகம் முற்போக்கு சிந்தனையோடு விளங்கும். சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நடத்தை விதிமுறை உருவாக்கப்படும். மதுரையில் தலைமை செயலக கிளை அமைக்கப்படும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அனைவருக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கப்படும்.

பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும். தமிழ்வழிக் கல்வியில் ஆராய்ச்சி கல்விவரை படிக்கலாம் என்ற நிலை உருவாக்கப்படும். கல்வி மாநில உரிமையில் கொண்டுவரப்படும். ஆளுநர் பதவியை அகற்ற வலியுறுத்தப்படும்.

மகளிர் காவல் நிலையங்கள் போல, மாவட்டந்தோறும் பெண்களுக்கு மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் அமைக்கப்படும் . மண்டல வாரியாக துணை நகரங்கள் அமைக்கப்படும். தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சீரமைக்கப்படும். வனப்பரப்பளவு அதிகரிக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in