Published : 03 Jun 2018 07:37 AM
Last Updated : 03 Jun 2018 07:37 AM

30 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து தனியார் விமான பைலட் எடுத்த தனுஷ்கோடி - தலைமன்னார் புகைப்படம்: இந்தியா, இலங்கையில் வைரலாகப் பரவி வருகிறது

தனியார் பயணிகள் விமானத்தின் விமானி ஒருவர் 30 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள தனுஷ்கோடி முதல் தலைமன்னார் வரையிலான புகைப்படம் இந்தியா, இலங்கையில் வைரலாகப் பரவி வருகின்றது.

டெல்லியைச் சேர்ந்த ரோஷன் என்பவர் தனியார் பயணிகள் விமானத்தின் ஓட்டுநராகப் பணிபுரிகிறார். இவர் உலகம் முழுவதும் விமானங்களில் பயணிக்கும்போது விமானிகளுக்கான காக்பிட் அறையில் இருந்து புகைப்படங்கள் எடுப்பதையும், அவற்றை சமூக வலைதளங்களில் வெளியிடுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார்.

இவர் இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து இந்தியா வரும் வழியில் 30 ஆயிரம் அடிகள் உயரத்தில் இருந்து தனுஷ்கோடியில் இருந்து இலங்கையின் தலைமன்னார் வரையிலான கடல் பகுதியில் அமைந்துள்ள மணல் தீடைகள், வடக்கே பாக் ஜலசந்தி கடல், தெற்கே மன்னார் வளைகுடா கடல் ஆகியவற்றை உள்ளடக்கி புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்ட்ராகிராம் சமூக வலைதளத்தில் நேற்று முன்தினம் பதிவிட்டுள்ளார்.

கடலோவியம் போன்று காட்சி தரும் இப்புகைப்படம் தற்போது இந்திய மற்றும் இலங்கை நெட்டிசன்களால் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரப்பப்பட்டு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x