‘‘மழை வெள்ள பாதிப்பில் இருந்து மக்களை காக்க தொடர் நடவடிக்கைகள் தேவை’’ - அரசுக்கு ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

ஜி.கே.வாசன் | கோப்புப்படம்
ஜி.கே.வாசன் | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: “தமிழக அரசு மதுரை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ததால் ஏற்பட்டுள்ள பாதிப்பில் இருந்து பொது மக்களைப் பாதுகாக்க வேண்டும். தொடர் மழையின் தாக்கத்தில் இருந்து பொது மக்களைப் பாதுகாக்க தொடர் நடவடிக்கை தேவை,”என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக அரசு மதுரையில் பெய்திருக்கும் கனமழையால் தேங்கியிருக்கும் தண்ணீரை வெளியேற்ற உடனடி பணிகளை, அவசியப் பணிகளை மேற்கொண்டு மதுரை மக்களைப் பாதுகாக்க வேண்டும். மேலும் தொடர் மழையின் தாக்கத்தில் இருந்து பொது மக்களைப் பாதுகாக்க தொடர் நடவடிக்கை தேவை.

தமிழக அரசு மதுரை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ததால் ஏற்பட்டுள்ள பாதிப்பில் இருந்து பொது மக்களைப் பாதுகாக்க வேண்டும். தென் மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து தாழ்வானப் பகுதிகளில் தண்ணீர் தேங்கிய நிலையில் மக்கள் அதிக சிரமத்துக்கு உட்பட்டிருக்கிறார்கள்.

குறிப்பாக மதுரை மாநகர மக்கள் மழையால் தண்ணீர் தேங்கிய நிலையில் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மதுரை மாநகர மக்களுக்கு மாநகராட்சி பணிகளை முழுவீச்சில் மேற்கொண்டு, நிவாரணம் கொடுத்து அவர்களுக்கு உடனடித் தேவைகளைப் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.

அதே போல வட பகுதிகளில் டெல்டா உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை செய்தி வெளிவந்திருப்பதால் தாழ்வான பகுதியில் இருப்பவர்கள், விவசாயிகள் மற்றும் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்பட வாய்ப்புண்டு. எனவே தமிழக அரசு, மழையால் பாதிக்கப்படும் மாவட்ட மக்களுக்கு உடனடி உதவிக்கரம் நீட்ட வேண்டும்,” என்று அவர் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in