முதல்வர், துணை முதல்வர் மீதான குற்றவியல் நடவடிக்கைக்கு அனுமதி வேண்டும் - ஆளுநரிடம் பாஜக கோரிக்கை

முதல்வர், துணை முதல்வர் மீதான குற்றவியல் நடவடிக்கைக்கு அனுமதி வேண்டும் - ஆளுநரிடம் பாஜக கோரிக்கை
Updated on
1 min read

சென்னை: தமிழக முதல்வர், துணை முதல்வர் இனவாத கருத்துகளை பரப்புவதால் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை தொடங்குவதற்கு அனுமதிக்க வேண்டும் என ஆளுநரிடம் தமிழக பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை, பாஜக மாநிலச் செயலாளர் அஸ்வத்தாமன் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அண்மையில் ஆளுநர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில்ஒரு வரி விடுபட்டது சர்ச்சை யாக்கப்பட்டது. இதில், ஆளுநர் மீது இனவாத அடிப்படை யில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவதூறு கருத்து தெரிவித் திருந்தார். நான் பெருமைமிகு கிறிஸ்தவன் என சொல்லும் உதயநிதி, சனாதனத்தை வேரறுப்போம் என்கிறார்.

இதைப்போல், இனவாத கருத்துகளை தொடர்ந்து முன்வைப்பது, ஆளுநரை பணி செய்யவிடாமல் தடுப்பது, இனவாத கருத்துகளை பரப்பி மக்களிடையே அமைதியை குலைக்கும் நோக்கில் பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழான குற்றங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஆகியோர் மீது பிஎன்எஸ் சட்டம் 218-ன் கீழ் குற்றவியல் நடவடிக்கையை தொடங்குவதற்கான அனுமதிவழங்க வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கி றோம். இதுதொடர்பாக ஆளுநர் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.

இங்கு மக்கள் பிரச்சினை கள் ஆயிரம் இருக்கின்றன. அவற்றில் கவனம் செலுத்தாமல் முதல்வரும், துணை முதல்வரும் மக்களை திசை திருப்பும் நயவஞ்சக நாடகங்களில்ஈடுபட்டுக் கொண்டிருக்கின் றனர். திமுகவின் வரலாறே இந்திய தேசத்துக்கு எதிரானது. அவர்களின் நடவடிக்கை கள் அனைத்துமே பிரிவினைவாதத்தை ஊக்குவிப்பதிலும், இனவெறி கருத்துகளை பேசுவதிலும், மதவெறியில் ஊறிப்போய் பேசுவதிலுமே இருக்கிறது.

இல்லாத இனவாதமான திராவிடத்தை பேசுவோர் கையில் தமிழ்ச் சமூகம் சிக்கிக்கொண்டிருக்கிறது. இதைவிடுத்து எப்போது அவர்கள்மனிதவாதம் பேசப்போகி றார்கள் என்பது தெரிய வில்லை. இவ்வாறு அவர் தெரிவித் தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in