Published : 23 Oct 2024 06:15 AM
Last Updated : 23 Oct 2024 06:15 AM

காஞ்சிபுரம் | ரூ.4 கோடி சொத்து சேர்த்த வழக்கு: திமுக பெண் கவுன்சிலர் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு

குஜராஜ், ராஜலட்சுமி

காஞ்சிபுரம்: சென்னை மேற்கு தாம்பரம் பகுதியைச் சேர்ந்தவர் குஜராஜ்(45). இவர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கீழ்பாலாறு வடிநிலக் கோட்ட படப்பை பிரிவில் நீர்வளத் துறைஉதவி பொறியாளராக ஏற்கெனவே பணியாற்றியவர். தற்போது கீழ்பாலாறு வடிநிலக் கோட்ட செங்கல்பட்டு பிரிவில் பணி செய்து வருகிறார்.

இவர் சாதாரண விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தாயார் தமிழரசி(77), சகோதரிராஜேஸ்வரி(58). தனது சகோதரிராஜேஸ்வரின் மகள் ராஜலட்சுமியை (38)திருமணம் செய்துள்ளார். ராஜலட்சுமி கடந்த 2021-ம்ஆண்டு வாலாஜாபாத் ஒன்றியத்தில் கவுன்சிலர் (திமுக) பதவிக்கு போட்டியிட்டு தேர்வானவர்.

ராஜேஸ்வரி தனது மகள் பெயரில் ஓர் ஒப்பந்த நிறுவனத்தை தொடங்கியுள்ளார். அதன் மூலம் நெடுஞ்சாலைத் துறையில் பல்வேறு ஒப்பந்தப் பணிகளை பெற்று செயல்படுத்தியுள்ளார். இதற்கு குஜராஜ் பல்வேறு வகையில் தனது பதவியை பயன்படுத்தி உதவியதாக கூறப்படுகிறது.

குஜராஜ், அவரது மனைவி ராஜலட்சுமி, தாய் தமிழரசி, சகோதரி ராஜேஸ்வரி ஆகியோர் பெயரில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2021-ம்ஆண்டு வரை வருமானத்துக்கு அதிகமாக ரூ.3 கோடியே 98 லட்சம் சொத்து சேர்த்துள்ளனர். வருமானத்தைவிட இவர்கள் 145 சதவீதம் அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீஸார் கணக்கிட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து குஜராஜ்,மனைவி ராஜல்டசுமி, தாய் தமிழரசி, சகோதரி ராஜேஸ்வரி மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x