Published : 21 Oct 2024 10:40 AM
Last Updated : 21 Oct 2024 10:40 AM
அரியலூர்: வாடகை இருசக்கர வாகனங்களின் பயணப் பாதுகாப்பு தொடர்பாக குழு அமைத்து ஆய்வு செய்யப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறினார்.
அரியலூர் மாவட்டம் செந்துறையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: நாடு முழுவதும் வாடகை இருசக்கர வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் கல்லூரி மாணவர்கள் உட்பட பலரும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சேவை தொடர வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால், சமூகஆர்வலர்களோ, இதில் பாதுகாப்பான பயணம் இல்லை என்று விமர்சிக்கின்றனர்.
எனவே, வாடகை இருசக்கர வாகனங்களின் பயணப் பாதுகாப்பு தொடர்பாக குழு அமைத்து ஆய்வு செய்யப்படும். தமிழ்த்தாய் வாழ்த்து பாடல், மனோன்மணீயம் சுந்தரனாரால் இயற்றப்பட்டு, தமிழக அரசால்அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இது, பண்பாடு தெரிந்தவர்களுக்குத்தான் தெரியும். சீமான் போன்ற அரசியல்வாதிகளுக்குத் தெரியாது.
தற்போது பெய்த கனமழையின்போது அமைச்சர்கள், அலுவலர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி, உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் களத்துக்குச் சென்று விரைவாகச் செயல்பட்டார். எனவே, மழை நின்ற மறுநாளே அனைத்து பகுதிகளிலும் நீர் வடிந்துவிட்டது. இதற்காக முதல்வர், துணை முதல்வரை மக்கள் பாராட்டுகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT