தேவநேயப் பாவாணரின் மகன் மறைவுக்கு வீரமணி, சீமான் இரங்கல்

தேவநேயப் பாவாணரின் மகன் மறைவுக்கு வீரமணி, சீமான் இரங்கல்
Updated on
1 min read

சென்னை: மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணரின் மகன் தே.மணிமன்றவாணன் மறைவுக்கு திக தலைவர் கி.வீரமணி, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட இரங்கல் செய்தி:

கி.வீரமணி: மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணரின் மகன் மணிமன்றவாணன் மறைவுற்ற செய்தியறிந்து வருந்துகிறோம். அடிக்கடி சந்தித்து உரையாடக் கூடிய, பழகுவதற்கு இனிய நண்பர். அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்.

சீமான்: மொழி ஞாயிறு தேவநேயப்பாவாணரின் மகன் மணிமன்றவாணன் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மனவேதனையும் அடைந்தேன். பாவாணரின் மொழி ஆராய்ச்சி பணிகளுக்கு உற்றதுணையாக உதவி புரிந்ததுடன், அவரது வாழ்க்கை வரலாற்றையும் ‘பாவாணர் நினைவலைகள்’ என்ற நூலாக வெளியிட்ட பெருமைக்குரியவர். தமிழுக்கு தொண்டாற்றிய மணிமன்ற வாணனின் இழப்பு தமிழ் கூறும் நல்லுலகுக்கு பேரிழப்பு. மணிமன்றவாணனுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in