அனைத்து ரயில் நிலையங்களிலும் க்யூஆர் குறியீடு கட்டண முறை

அனைத்து ரயில் நிலையங்களிலும் க்யூஆர் குறியீடு கட்டண முறை
Updated on
1 min read

சென்னை: சென்னை ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட அனைத்து ரயில் நிலையங்களிலும் க்யூஆர் குறியீடு கட்டண முறை நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.

முன்பதிவில்லாத டிக்கெட்கள், நடைமேடை டிக்கெட்கள், முன்பதிவு டிக்கெட் என அனைத்து டிக்கெட் கவுன்ட்டர்களிலும் க்யூஆர் குறியீடு சாதனங்கள் நிறுவப்பட்டுள்ளன. பணம் செலுத்தும் முறையை நெறிப்படுத்தவும், பணம் கையாளுதல் தொடர்பான சிக்கல்களைத் தவிர்க்கவும் பயணச் சீட்டுகள் விநியோக முறையை எளிதாக்கும் நோக்கிலும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

பயணச்சீட்டு மையங்களில் உள்ள க்யூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்த பிறகு, யுபிஐ செயலிகளின் மூலம் டிக்கெட் கட்டணத்தை செலுத்தலாம். கட்டணம் செலுத்தப்பட்டு உறுதி செய்தவுடன் டிக்கெட் வழங்கப்படும். டிக்கெட் மையத்தில் காத்திருப்பு காலத்தை குறைக்கவும், பயணிகளுக்கு வசதியான பயணத்தை வழங்கவும் இந்த திட்டம் உறுதுணையாக இருக்கும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in