

சட்டப்பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்தின்போது, ‘அனைத்து மாவட்டங்களிலும் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ மாணவ, மாணவியருக்கு பொதுத் தேர்வுக்கான வினா வங்கி புத்தகத்தை அரசு வழங்குமா?’ என்று அதிமுக உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் (ஆண்டிப்பட்டி) கேட்டார்.
அதற்கு பதிலளித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி கூறியதாவது: ஏற்கெனவே பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் வினா வங்கி தயாரித்து, மாணவர்களுக்கு விற்கப்பட்டு வருகிறது. அதனால், தனியாக வினா வங்கி தயாரிக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும் பொதுத் தேர்வுகளில் 70 சதவீதத்துக்கு குறைவாக மதிப்பெண் பெறும் அரசுப் பள்ளி களின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களை அழைத்து கூட்டம் நடத்தி, அவர்களுக்கு மட்டும் வினா வங்கி வழங்கப்பட்டு வருகிறது.