மழைக்கால மீட்பு பணிகளில் ஈடுபட்டவர்களுக்கு நோய் தொற்றுகளை தடுக்கும் மருந்து: பொது சுகாதாரத்துறை இயக்குநர் அறிவுறுத்தல்

மழைக்கால மீட்பு பணிகளில் ஈடுபட்டவர்களுக்கு நோய் தொற்றுகளை தடுக்கும் மருந்து: பொது சுகாதாரத்துறை இயக்குநர் அறிவுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: மழைக்கால மீட்பு பணிகளில் பணியாற்றியவர்களுக்கு நோய்த் தொற்றுகளை தடுக்கும் வகையில் தடுப்பு மருந்துகளை வழங்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் அறிவுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அனைத்து மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கும் அவர் அனுப்பியுள்ள சுற்றறிக் கையில் கூறியிருப்பதாவது:

மழைக்கு பிந்தைய பாதிப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் கன மழை எச்சரிக்கையை வெளியிட்ட உடனேயே, அதற்கான முன்னேற்பாடுகளை மேற் கொள்ளுமாறு சுகாதாரத் துறைஅதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக மழைக்குப் பிந்தைய பாதிப்புகளைத் தடுப்பதற்கான செயல் திட்டத்தை பொதுசுகாதாரத்துறை மேற்கொண்டுள்ளது.

நோய் தொற்றுகளையும், குறிப்பாக, எலிக் காய்ச்சலையும் தடுக்க ‘கீமோப்ரோஃபி லாக்சிஸ்' மருந்துடன் ‘டாக்ஸிசைலின் 200 மி.கி' கேப்ஸ் யூல் மாத்திரையையும் வழங்க வேண்டும்.

உறுதி செய்ய வேண்டும்: அதன்படி, சுகாதாரத் துறையினர், முன்களப் பணியாளர்கள், துப்புரவுப் பணி யாளர்கள், செய்தியாளர்கள் என மழைக்கால மீட்பு நடவடிக்கைகளில் பங்கெடுக் கும் அனைவருக்கும் அந்த மருந்துகளை வழங்குதல் அவசியம் ஆகும். இதனை மாவட்ட சுகாதார அதிகாரிகள் உறுதி செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரி வித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in