Published : 28 Jun 2018 10:16 AM
Last Updated : 28 Jun 2018 10:16 AM

டெல்லியில் நடந்த மாநாட்டில் தமிழக வேளாண் துறையின் உழவன் கைபேசி செயலிக்கு வெள்ளி விருது: முதல்வரிடம் வாழ்த்து பெற்றார் வேளாண் துறை அமைச்சர் துரைகண்ணு

டெல்லியில் நடந்த மாநாட்டில் தமிழக வேளாண்துறை உருவாக்கிய உழவன் கைபேசி செயலிக்கு ஸ்கோச் வெள்ளி விருது வழங்கப்பட்டது. அந்த விருதை வேளாண்துறை அமைச்சர் ஆர்.துரைகண்ணு முதல்வர் பழனி சாமியிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.

இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வேளாண்மைத் துறையில் மின்னணு தொழில்நுட்பத்தின் மூலம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் தமிழக அரசு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, உழவன் கைபேசி செயலி என்ற புதிய சேவையை முதல்வர் கே.பழனி சாமி ஏப்ரல் 5-ம் தேதி தொடங்கி வைத்தார்.

இந்த செயலியில், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் விவசாயிகளுக்குத் தேவையான வேளாண் மானியத் திட்டங்கள், பயனாளி திட்ட முன்பதிவு, பயிர் காப்பீடு விவரம் அறிதல், விதை இருப்பு விவரம் அறிதல், உரம் இருப்பு அறிதல், வேளாண் இயந்திரங் கள் வாடகை மையங்கள், விளைபொருட்களின் சந்தை விலை அறிதல், வானிலை அடிப்படையில் வேளாண் அறிவுரை பெறுதல், வேளாண் விரிவாக்கப் பணியாளர்கள் வருகை ஆகிய 9 வகையான சேவைகள் இடம் பெற்றுள்ளன.

நல்ல வரவேற்பு

இந்த நிலையில், விவசாயி களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற வரவேற்பை அடுத்து, இச்செயலியில், முக்கிய அணைகளின் நீர்மட்டம் அறிதல், வேளாண் செய்தி கள் மற்றும் பயனாளிகளின் கருத்துகள் அறிதல் ஆகிய 3 புதிய சேவைகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன. இதுவரை, ஒரு லட்சத்து 45 ஆயிரம் பயனாளர்கள் இந்த உழவன் செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர். மேலும், 15,300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மானியத் திட்ட பலன்களைப் பெறுவதற்காக பதிவு செய்துள்ளனர்.

தீவிர கருத்துக் கணிப்பு

ஸ்கோச் நிறுவனத்தின் 52-வது மாநாடு டெல்லியில் உள்ள தேசிய அரசியலமைப்பு மன்ற கட்டிடத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு வேளாண் துறை உழவன் கைபேசி செயலி என்ற தலைப்பில் பங்கு கொண்டது. மாநாட்டில், வேளாண் துறை உரு வாக்கிய உழவன் கைபேசி செயலிக்கு புகழத்தக்க விருது அறிவிக்கப்பட்டது.

இறுதிக்கட்டமாக கடந்த 23-ம் தேதி நடைபெற்ற மாநாட்டில், பொது வாக்கெடுப்பு மற்றும் தீவிர கருத்துக் கணிப்பு அடிப் படையில் வேளாண்மையில் தகவல் தொழில்நுட்பம் என்ற பிரிவின்கீழ் உழவன் கைபேசி செயலி சேவைக்கு ஸ்கோச் வெள்ளி விருது வழங்கி சிறப்பித்தது.

இந்த நிலையில், உழவன் கைபேசி செயலிக்கு வழங்கப்பட்ட ஸ்கோச் வெள்ளி விருதை வேளாண்துறை அமைச்சர் ஆர்.துரைகண்ணு புதன்கிழமை தலைமைச் செயலகத்தில் முதல் வர் கே.பழனிசாமியிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார். அப்போது வேளாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, வேளாண்மைத் துறை இயக்குநர் வி.தட்சிணாமூர்த்தி மற்றும் வேளாண்துறை உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x