தொழில்நுட்ப கோளாறு காரணமாக தேர்தல் ஆணையர் பயணித்த ஹெலிகாப்டர் தரையிறக்கம்

தொழில்நுட்ப கோளாறு காரணமாக தேர்தல் ஆணையர் பயணித்த ஹெலிகாப்டர் தரையிறக்கம்
Updated on
1 min read

பிதவுரகர்: இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், உத்தராகண்ட் மாநில கூடுதல் தலைமை தேர்தல்அதிகாரி விஜய் குமார் ஜோக்தாந்தே உள்ளிட்டோர் பயணம்செய்த ஹெலிகாப்டர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக உத்தராகண்ட் மாநிலம் பிதவுரகர் மாவட்டத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. ஹெலிகாப்டரில் பயணித்த அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ருத்ரபிரயாக் மாவட்டத்தைச் சேர்ந்த கேதார்நாத் தொகுதி தற்போது பாஜக ஆட்சியின்கீழ் உள்ளது. 2022 சட்டமன்ற தேர்தலில் ஷைலா ராணி ராவத் பாஜக சார்பில் போட்டியிட்டு கேதார்நாத் தொகுதி எம்எல்ஏ ஆனார். இந்நிலையில், ஷைலா ராணி ராவத் (68) உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த ஜூலை மாதம் காலமானார். இதனால் கேதார்நாத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

நாடு முழுவதும் 14 மாநிலங்களை சேர்ந்த 48 சட்டமன்ற தொகுதிகள், 2 மக்களவைத் தொகுதிகள் என மொத்தம் 50 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ள நிலையில்கேதார்நாத் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனிடையில் தலைமை தேர்தல்ஆணையர் பயணித்த ஹெலிகாப்டர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசரமாக உத்தராகண்டில்தரையிறக்கம் செய்யப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in