

தமிழகத்தில் கத்தி மற்றும் புலிப் பார்வை திரைப்படங்களுக்கு தடை விதிக்கக்கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கலான மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப் பட்டது.
மதுரை கே.கே.நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் வி.ரமேஷ், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு விவரம்: லைக்கா நிறுவனம் தயாரிக்கும் கத்தி மற்றும் புலிப்பார்வை ஆகிய படங்கள் திரையிடப்பட உள்ளன. லைக்கா நிறுவனம் இலங்கை அதிபர் ராஜபக்சேவின் உறவினர் சுபாஷ்கரனுக்கு சொந்தமானது. கத்தி படத்தில் தமிழர்களுக்கு எதிரான வசனங்கள் இடம் பெற்றுள் ளன. மேலும், அந்தப் படத்தில் இலங்கையில் பாலியல் பலாத்காரத் துக்கு ஆளான பெண்கள் அமைதியாக வாழ்வதாக வும், தமிழர், சிங்களர் ரத்தம் மூலம் புதிய இனம் உருவாவதாகவும், அவர்கள் சேர்ந்து வாழ்வதாகவும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.
புலிப்பார்வை படத்தில் விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் வே.பிரபாகரனின் மகன் பாலசந்திரனின் மரணத்தை மோசமாக சித்தரித்துள்ளனர். இந்தப் படத்தில் குழந்தைகள் ராணுவத்தில் ஈடுபடுத்தப்பட்டதும், பாலச்சந்திரனை சீன ராணுவம் கொலை செய்ததாகவும் கூறப்பட் டுள்ளது.
இரு திரைப்படங்களிலும் தமிழர்களை தேச விரோதிகளா கவும், தீவிரவாதிகளாகவும் காட்டி உள்ளனர். கத்தி, புலிப்பார்வை திரைப்படங்களை தமிழகத்தில் திரையிட்டால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும்.
இரு திரைப்படங்களுக்கும் தடை விதிக்கக்கோரி, தமிழக காவல் துறை இயக்குநருக்கு மனு அனுப் பினேன். அந்த மனு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி என். கிருபாகரன் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் பீட்டர் ரமேஷ் குமார் வாதிடும்போது, ‘மடிசார் மாமி’ படத்துக்கு எதிரான வழக் கில், திரைப்படத்தில் பெண்களை தவறாக சித்தரிக்கக் கூடாது, பாலியல் வன்முறை இருக்கக் கூடாது, வன்முறையில் குழந்தை களுக்கு தொடர்பு இருப்பதாக சித்தரிக் கக் கூடாது என்பன உட்பட பல்வேறு நிபந்தனைகளை நீதிமன்றம் விதித்தது. அந்த நிபந்தனைகள் அனைத்தும் இரு படங்களிலும் மீறப்பட்டுள்ளன. இந்த திரைப்படங்களை திரையிட்டால் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படும். தமிழக போலீஸாரால் அனைத்து தியேட்டர்களிலும் பாதுகாப்பு வழங்க முடியாது என்றார்.
நீதிபதி கூறும்போது, படத்தை பார்க்காமல் யூகத்தின் அடிப் படையில் எதையும் கூற முடியாது. சென்சார் போர்டு அனுமதி வழங்கி உள்ளது. படத்தில் ஆட்சேபகர மான காட்சிகள், வசனங்கள் இருந்தால் சென்சார் போர்டில் முதலில் முறையிட வேண்டும். சென்சார் போர்டு நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றம் வரலாம் என்றார்.
பின்னர், இரு படங்களையும் நீதிபதி பார்வையிட்டு ஒரு முடிவுக்கு வர வேண்டும் என மனு தாரரின் வழக்கறிஞர் கூறினார்.
அதற்கு, நான் எந்த திரைப்படத்தையும் இலவசமாக பார்க்க விரும்பவில்லை என்று கூறிய நீதிபதி தீர்ப்பை ஒத்தி வைத்தார்.