Published : 17 Oct 2024 05:28 AM
Last Updated : 17 Oct 2024 05:28 AM
சென்னை: சென்னையில் கனமழை எச்சரிக்கை, பயணிகள் குறைவாக இருந்ததால் 6 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கனமழை, போதிய பயணிகள் இல்லாதது போன்ற காரணங்களால் நேற்று முன்தினம் 12 விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டது.
2-வது நாளாக நேற்று சென்னையிலிருந்து காலை 6:55 மணிக்கு மதுரை செல்ல வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், காலை 10:35 மணிக்கு சேலம் செல்ல வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், பிற்பகல் 2:40 மணிக்கு சீரடி செல்ல வேண்டிய ஸ்பைஸ் ஜெட் ஏர்லைன்ஸ் விமானம் ஆகியவை ரத்தாகின.
அதேபோல், மதுரையிலிருந்து காலை 10 மணிக்கு சென்னை வர வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், சீரடியில் இருந்து பகல் 1:40 மணிக்கு சென்னை வரவேண்டிய ஸ்பைஸ் ஜெட் ஏர்லைன்ஸ் விமானம், மாலை 6 மணிக்கு சேலத்திலிருந்து சென்னை வர வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT