Published : 14 Jun 2018 08:21 am

Updated : 14 Jun 2018 08:21 am

 

Published : 14 Jun 2018 08:21 AM
Last Updated : 14 Jun 2018 08:21 AM

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள 5 மாவட்டங்களில் இன்றும் கனமழை நீடிக்க வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

5

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கோவை, நீலகிரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்றும் கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:

அரபிக் கடலில் இருந்து ஈரப்பதம் மிகுந்த தென்மேற்கு பருவக்காற்று மேற்கு தொடர்ச்சி மலை வழியாக தமிழகம் நோக்கி வீசி வருகிறது. அதன் காரணமாக கோவை, நீலகிரி, நெல்லை, தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இம்மழை இன்றும் நீடிக்க வாய்ப்புள்ளது.

மேலும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பச் சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் இடியுடன் மழையும், தமிழகத்தின் உள் மாவட்டங்களில் பலத்த இடியுடன் மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். தென்மேற்கு பருவக் காற்றின் தாக்கத்தால், பலத்த தரைக்காற்று வீசக்கூடும்.

இதற்கிடையில் புதன்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னகள்ளாறில் 10 செமீ, நீலகிரி மாவட்டம் தேவாலா, கோவை மாவட்டம் வால்பாறை ஆகிய இடங்களில் தலா 7 செமீ, தேனி மாவட்டம் பெரியாரில் 6 செமீ மழை பெய்துள்ளது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author