Published : 07 Jun 2018 08:31 AM
Last Updated : 07 Jun 2018 08:31 AM

கல்விக் கட்டண விவரங்களை ஆன்லைனில் உடனடியாக பதிவேற்ற வேண்டும்: தனியார் பள்ளிகளுக்கு உத்தரவு

கல்விக்கட்டணம் நிர்ணயிக்கப்படாத தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணயத்துக்கு தேவையான விவரங்களை உடனடியாக ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று கல்விக்கட்டண நிர்ணயக்குழு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் சுயநிதி பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த பள்ளிகளில் 6,500 பள்ளிகளுக்கு கல்விக்கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுவிட்டது. எஞ்சிய சுமார் 3 ஆயிரம் பள்ளிகளுக்கு நடப்பு கல்வி ஆண்டுக்கு (2018-19) இன்னும் கட்டணம் நிர்ணயிக்கப்படவில்லை. இந்த நிலையில், கல்விக்கட்டணம் நிர்ணயம் செய்வதற்கு தேவையான விவரங்களை உடனடியாக பள்ளி நிர்வாகத்தினர் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யுமாறு தனியார் கல்விக்கட்டண நிர்ணயக்குழு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக அந்த குழுவின் தனி அலுவலர், முதன்மை கல்வி அதிகாரிகள், மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர்கள், தொடக்கக் கல்வி அதிகாரிகள், உதவி தொடக்கக்கல்வி அதிகாரிகள் ஆகியோருக்கு தகவல் அனுப்பியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x