Published : 15 Oct 2024 06:30 AM
Last Updated : 15 Oct 2024 06:30 AM
சென்னை: கனமழை காரணமாக கலைஞர் நூற்றாண்டு பூங்கா 4 நாட்களுக்கு மூடப்படுவதாக தோட்டக்கலைத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறைவெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை, சுற்று வட்டார பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழைபெய்யும் என வானிலை ஆய்வுமையத்தால் அறிவிக்கப்பட்டு, ஆரஞ்சு மற்றும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, சென்னை கதீட்ரல் சாலையில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்கா, பொதுமக்களின் பாதுகாப்பு கருதி 15-ம் தேதி (இன்று) முதல் 18-ம் தேதி வரை 4 நாட்கள் செயல்படாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT