திண்டுக்கல் குறைதீர் கூட்டத்தில் குறைந்த கூட்டம் - மழையால் பிற பணிகளில் பொதுமக்கள் கவனம்

திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் வெறிச்சோடிக்காணப்பட்ட மனுக்கள் பதிவு செய்யுமிடம். | படம்: நா.தங்கரத்தினம்.
திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் வெறிச்சோடிக்காணப்பட்ட மனுக்கள் பதிவு செய்யுமிடம். | படம்: நா.தங்கரத்தினம்.
Updated on
1 min read

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டத்தில் தங்கள் குறைகளை வழக்கத்தைவிட இந்த வாரம் கூட்டம் குறைவாக காணப்பட்டது.

திண்டுக்கல் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்ட ஆட்சியர் மொ.நா.பூங்கொடி தலைமையில் திங்கள் கிழமை தோறும் குறைதீர் கூட்டம் நடைபெறும். இதில் அனைத்து துறை அதிகாரிகள் கலந்துகொள்வர். மனுக்களை பெறும் ஆட்சியர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் மனுக்களை வழங்கி 15 தினங்களுக்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடுவார். இதனால் வாரந்தோறும் திங்கள் கிழமை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் மக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக எழுதி ஆட்சியரிடம் வழங்குவர். வழக்கமாக 350 மனுக்களுக்கு வரை பொதுமக்களிடம் இருந்து பெறப்படும்.

ஆனால், இந்த வாரம் 172 மனுக்கள் மட்டுமே பெறப்பட்டது. குறைந்த எண்ணிக்கையிலான பொதுமக்களே மனு கொடுக்க வந்திருந்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர் மழையால் மக்கள் விவசாயப் பணிக்கு சென்றது. தீபாவளி நேரம் என்பதால் வேறு பணிகளில் கவனம் செலுத்தியது என்பதால் வழக்கமாக கூட்டத்தை விட இந்த வாரம் கூட்டம் குறைவாக காணப்பட்டது. தீபாவளி முடியும் வரை மக்கள் தங்கள் குறைகளை தெரிவிப்பதை தள்ளிவைப்பார்கள் என்றே தெரிகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in