Published : 22 Aug 2014 12:00 AM
Last Updated : 22 Aug 2014 11:08 AM
ரிசர்வ் வங்கியின் 2014-ம் நிதி ஆண்டின் உபரித்தொகை 14.75 சதவீதம் சரிந்து 52,679 கோடி ரூபாயாக இருக்கிறது. இந்திய பத்திரங்களில் அந்நிய முதலீடு குறைந்தது மற்றும் வட்டி வருமானம் குறைந்தது ஆகிய காரணங்களால் உபரி குறைந்ததாக ரிசர்வ் வங்கியின் ஆண்டு அறிக்கை தெரிவித்திருக்கிறது. ரிசர்வ் வங்கி ஜூலை முதல் ஜூன் வரையிலான காலத்தை நிதி ஆண்டாக கணக்கில் எடுத்துக்கொள்கிறது.
இருந்தாலும் மொத்த உபரி நிதியை மத்திய அரசுக்கு கொடுத்து விட்டது ரிசர்வ் வங்கி. ஆனால் ரிசர்வ் வங்கியின் நிதிநிலை அறிக்கை மதிப்பு 10% உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் ரூ.23,90,700 கோடியாக இருந்தது, இப்போது ரூ.26,24,400 கோடியாக இருக்கிறது. அந்நிய செலாவணி அதிகரித்திருக்கிறது.
ரிசர்வ் வங்கி வைத்திருக்கும் தங்கத்தின் அளவில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. 557.75 டன்னாகவே இருக்கிறது. ஆனால் ரூபாய் மதிப்பு காரணமாக தங்கத்தின் மதிப்பு குறைந் திருக்கிறது. மேலும் நுகர்வோர் பணவீக்கத்தை 2016க்குள் 6 சதவீதமாக குறைப்போம் என்றும் நடப்பு நிதி ஆண்டின் வளர்ச்சி 5.5 சதவீதமாக இருக்கும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது.