காவேரிப்பட்டணம் அருகே சாலை விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

காவேரிப்பட்டணம் அருகே சாலை விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
Updated on
1 min read

கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர்.

தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் மாம்பட்டி கும்பாரம்பட்டியைச் சேர்ந்தவர் ராகுல் கனிஸ்கர் (19). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.இ. முதலாமாண்டு படித்து வந்தார். இவர் தனது நண்பர்கள் நாச்சினம்பட்டி வசந்தகுமார் (27), ஞான பாதப்பட்டி விஜி (26) ஆகியோருடன் நேற்று முன்தினம் அதிகாலை தருமபுரியிலிருந்து இரு சக்கர வாகனத்தில் கிருஷ்ணகிரி நோக்கி சென்று கொண்டிருந்தார். இரு சக்கர வாகனத்தை ராகுல் ஓட்டினார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகேயுள்ள போத்தாபுரம் பகுதியில் வந்தபோது, எதிரே வந்த பார்சல் லாரி எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த வசந்த குமார், விஜி ஆகியோர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த ராகுல் கனிஸ்கர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

விபத்து குறித்து காவேரிப் பட்டணம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தினர். இதில், பார்சல் லாரியை ஓட்டிவந்த கன்னியாகுமரி மாவட் டம் மார்த்தாண்டத்தைச் சேர்ந்த அலெக்சாண்டர் (38) மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரிடம் போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in