Published : 14 Jun 2018 08:29 AM
Last Updated : 14 Jun 2018 08:29 AM

பழநி கோயில் சிலை மோசடி வழக்கில் அறநிலைய முன்னாள் ஆணையர் குறித்து தகவல் தந்தால் சன்மானம்

பழநி பாலதண்டாயுதபாணி கோயில் சிலையை வடிவமைத்ததில் முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், ஸ்தபதி முத்தையா, கோயில் முன்னாள் இணை ஆணையர் கே.கே.ராஜா, முன்னாள் உதவி ஆணையர் புகழேந்தி, தங்க நகை மதிப்பீட்டாளர் தேவேந்திரன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இவ்வழக்கில் தேடப்படும் ஓய்வுபெற்ற இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தனபாலின் முன்ஜாமீன் மனுவை உயர் நீதிமன்ற கிளை, தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், தனபால் குறித்து துப்பு கொடுத்தால் ரூ.20 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் தெரிவித்துள்ளனர். அவருக்கு அடைக்கலம் கொடுப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். துப்பு கொடுப்போர் குறித்து ரகசியம் காக்கப்படும் எனவும் போலீஸார் கூறியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x