காலாண்டு தேர்வு மதிப்பெண்களை அக்.15-க்குள் எமிஸ் தளத்தில் பதிவேற்ற உத்தரவு

காலாண்டு தேர்வு மதிப்பெண்களை அக்.15-க்குள் எமிஸ் தளத்தில் பதிவேற்ற உத்தரவு
Updated on
1 min read

சென்னை: பள்ளி மாணவர்களின் காலாண்டு தேர்வு மதிப்பெண்களை எமிஸ் வலைதளத்தில் அக்.15-ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டுமென பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன் மற்றும் தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் பூ.ஆ.நரேஷ் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் இன்று (அக்.8) அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், “தமிழகத்தில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டுக்கான காலாண்டு மற்றும் முதல் பருவத் தேர்வில் 6 தல் 8-ம் வகுப்பு மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை எமிஸ் வலைதளத்தில் ஆசிரியர்கள் பதிவு செய்ய வேண்டும்.

விடைத்தாள்களை திருத்திய பின்னர் தொகுத்தறி மதிப்பெண்களை (100 மதிப்பெண்) அக்டோபர் 15-ம் தேதிக்குள் பதிவு செய்வது அவசியமாகும்.இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த தகவலை அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை கற்பிக்கும் அனைத்துவித ஆசிரியர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும்.

இதுசார்ந்து அனைத்துப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் உரிய அறிவுரைகளை வழங்க அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in