Published : 08 Oct 2024 05:38 AM
Last Updated : 08 Oct 2024 05:38 AM

பாஜகவில் ஏராளமானோர் சேர்வதற்கு காரணம் மோடியின் நேர்மையான ஆட்சி: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமிதம்

திருவாரூர் தெற்கு வீதியில் உள்ள ஒரு வணிக நிறுவனத்தில் பணியாற்றும் இளைஞர்களிடம், பாஜகவில் சேர வேண்டியதன் அவசியம் குறித்து விளக்கிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

திருவாரூர்: பாஜகவில் ஏராளமானோர் சேர்வதற்குக் காரணம் பிரதமர் மோடியின் நேர்மையான ஆட்சி என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமிதம் தெரிவித்தார் .திருவாரூருக்கு நேற்று வந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தியாகராஜ சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

பின்னர், கர்னாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துஸ்வாமி தீட்சிதர் அவதரித்த இல் லத்துக்குச் சென்று வழிபட்டார்.வணிகர்களுடன் சந்திப்புஅதைத்தொடர்ந்து அங்குள்ள பெட்டிக் கடை ஒன்றில் வியாபாரம் எவ்வாறு நடைபெறுகிறது என கேட்டறிந்தார். பின்னர், அங்கு நடைபெற்ற பாஜக உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச

உலகிலேயே வலிமை வாய்ந்ததலைவராக பிரதமர் மோடி உள்ளார். இந்தியாவில் அதிக வலிமைவாய்ந்த கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது. பொதுமக்கள் திரளானோர் பாஜகவில் உறுப்பினராகச் சேர்வதற்கு பிரதமர் மோடியின் நேர்மையான ஆட்சியே காரணம். பிரதமர் மோடியின் ஆட்சியில்தான் இந்திய பொருளாதாரம் 7 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது.

விவசாயிகள், ஏழை - எளியமக்கள் பயன்பெறும் வகையிலும், உலக அரங்கில் இந்தியாவை வல்லரசாக உயர்த்தும் வகையிலும் ஆட்சி நடத்தி வருகிற பிரதமர் மோடிக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில், பொதுமக்கள் தங்களை பாஜகவில் உறுப்பினர்களாக இணைத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

பாஜக பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், மேலிட பார்வையாளர் பேட்டை சிவா,மாநிலச் செயற்குழு உறுப்பினர் ராகவன், மாவட்ட பொதுச் செயலாளர் வி.கே.செல்வம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x