குன்னூரில் குவிந்த பட்டாம்பூச்சிகள்

குன்னூர் காட்டேரி பூங்காவில் குவிந்துள்ள பட்டாம்பூச்சிகள்.
குன்னூர் காட்டேரி பூங்காவில் குவிந்துள்ள பட்டாம்பூச்சிகள்.
Updated on
1 min read

குன்னூர்: வடகிழக்குப் பருவமழைக் காலம் தொடங்கும் நேரத்தில், பட்டாம்பூச்சிகள் இடம்பெயர்வது வழக்கம். அதன்படி, தற்போது மேற்குத் தொடர்ச்சி மலையை நோக்கி பட்டாம்பூச்சிகள் இடம்பெயர்ந்து வருகின்றன.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் அதிகபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸாக உள்ளது. இந்த சீதோஷ்ண நிலை, பட்டாம்பூச்சிகளுக்கு ஏற்றதாகும். குன்னூர் சுற்றுப்புறப் பகுதிகளில் தற்போது 20 வகையான பட்டாம்பூச்சிகள் வருகை தந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அவர்கள் கூறும்போது, “நீலப்புலி மற்றும் லிம்னியாஸ் எனப்படும் பட்டாம்பூச்சிகள் ஆயிரக்கணக்கில் காட்டேரி பூங்கா பகுதிகளில் உள்ள மலர்ச் செடிகளில் தேன் உட்கொண்டு வருகின்றன.

இவை பெரிய இறக்கைகள் கொண்ட பட்டாம்பூச்சியாகும். இது 90 முதல் 100 மில்லிமீட்டர் வரையிலான இறக்கைகளைக் கொண்டது. காட்டேரி பூங்காவில் இந்த வகை பட்டாம்பூச்சிகளை சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் கண்டுரசித்து, செல்போனில் படம் பிடித்துச் செல்கின்றனர்” என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in