Published : 07 Oct 2024 05:55 AM
Last Updated : 07 Oct 2024 05:55 AM

சென்னை | குழந்தை சாப்பிட்ட போண்டாவில் பிளேடு: ஓட்டலுக்கு நோட்டீஸ்

சென்னை: சென்னை வில்லிவாக்கம் சிட்கோ தொழிற்பேட்டை பகுதியில் தனியார் ஓட்டல் ஒன்று இயங்கி வருகிறது. இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த விவேக் என்பவரின் உறவினர், அந்த உணவகத்தில் இருந்து தனது குழந்தைக்காக போண்டாவை நேற்று முன்தினம் வாங்கி சென்றுள்ளார். குழந்தை போண்டாவை சாப்பிடும் போது, அதிலிருந்த பிளேடு துண்டு ஒன்று வாயில் சிக்கியது.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், உறவினர்களுடன் ஓட்டலுக்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால் இச்சம்பவம் குறித்து உணவகத்தின் உரிமையாளர்கள் சரியாக பதிலளிக்காததால், உடனடியாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதனடிப்படையில் விரைந்து வந்த சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஓட்டலில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது உணவுகளின் தரம் குறித்து அறிய மாதிரி உணவுகள் சேகரிப்பட்டு ஆய்வகங்களுக்கு எடுத்துச்செல்லப்பட்டன. மேலும் உணவகத்தை நேரில் ஆய்வு செய்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், பிளேடு துண்டு தொடர்பாக உரிய விளக்கம் கேட்டு ஓட்டலுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x