போக்குவரத்து தொழிலாளருக்கு போனஸ் வழங்க கோரிக்கை

போக்குவரத்து தொழிலாளருக்கு போனஸ் வழங்க கோரிக்கை
Updated on
1 min read

சென்னை: போக்குவரத்து தொழிலாளர்களின் போனஸ் தொடர்பான அறிவிப்பை விரைந்து வெளியிட வேண்டும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் தொழிலாளர்கள் சம்மேளனம் (ஏஐடியுசி) வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆர்.ஆறுமுகம், போக்குவரத்துத் துறைச் செயலருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் சுமார் 1.20 லட்சம் அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 2023-24-ம் நிதியாண்டுக்கான போனஸ் மற்றும் கருணைத் தொகை சேர்த்து போக்குவரத்துக் கழகங்களில் உள்ள சட்டப்படியான குறைந்தபட்ச ஊதியம் கணக்கிட்டு, அதன்படி 25 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும். மேலும், ஒப்பந்த முறையில் பணிபுரிந்து வரும் பாதுகாவலர்கள், உணவகத்தில் பணிபுரிவோர், பஸ்பாடி கிளீனர், சுகாதார பணியாளர்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் பணிபுரிந்து வரும் டிக்கெட் கான்வாசர் உள்ளிட்டோருக்கும் 2023-24 நிதியாண்டில் 30 நாட்களுக்கு மேல் பணிபுரிந்த அனைவருக்கும் சட்டப்படி போனஸ் வழங்க வேண்டும்.

கடந்த நிதியாண்டில் அரசு போக்குவரத்துக் கழகங்களில் உள்ள குறைந்தபட்ச ஊதியம் சட்டப்படி கணக்கிட்டு, போனஸ் வித்தியாசம், நிலுவைத் தொகையையும் சேர்த்து வழங்க வேண்டும். இது தொடர்பாக தொழிற்சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in