Published : 12 Jun 2018 08:26 PM
Last Updated : 12 Jun 2018 08:26 PM

சவுதி அரேபியாவில் பணிபுரிய மருத்துவர்கள் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு

சவுதி அரேபிய அமைச்சகத்தின் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு மருத்துவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''சவுதி அரபிய அமைச்சகத்தின் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு தீவிர சிகிச்சை பிரிவு, தீவிர சிகிச்சை மயக்க மருத்துவம், இன்டெர்னல் மெடிசன் (Internal Medicine), அறுவை சிகிச்சை அனைத்து மருத்துவப் பிரிவுகள் , பேமிலி மெடிசின் (Family Medicine), நியோநாட்டேல் தீவிர சிகிச்சைப் பிரிவு (Neonatal ICU) போன்ற பிரிவுகளில் அனுபவமிக்க அலோபதி மருத்துவர்களுக்கான நேர்முகத் தேர்வு 09.07.2018 முதல் இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் நடைபெற உள்ளது.

இரண்டு வருட பணி அனுபவம் மற்றும் 55 வயதிற்குட்பட்ட கன்சல்டன்டுகள், மற்றும் சிறப்பு மருத்துவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர் ஆவர்.

தேர்ந்தெடுக்கப்படும் சிறப்பு மருத்துவர்களுக்கு அனுபவத்திற்கேற்ப மாத ஊதியமாக ரூ 1.84 லட்சம் முதல் ரூ 3.03 லட்சமும் (வளருகின்ற நாடுகளில் பட்டம் பெற்றவர்களுக்கு), அனுபவத்திற்கேற்ப ரூ 3.07 லட்சம் முதல் ரூ 5.09 லட்சமும் (வளர்ந்த நாடுகளில் பட்டம் பெற்றவர்களுக்கு), கன்சல்டன்ட் மருத்துவர்களாக இருப்பின் ரூ 2.42 லட்சம் முதல் ரூ 3.98 லட்சமும் (வளருகின்ற நாடுகளில் பட்டம் பெற்றவர்களுக்கு), ரூ 5.01 லட்சம் முதல் ரூ 7.59 லட்சமும் (வளர்ந்த நாடுகளில் பட்டம் பெற்றவர்களுக்கு), உணவு, இருப்பிடம், விமான டிக்கெட், குடும்ப விசா மற்றும் சவுதி அரேபிய அரசின் சட்டத்திட்டத்திற்குட்பட்ட இதர சலுகைகள் வேலையளிப்போரால் வழங்கப்படும்.

விருப்பமும் தகுதியும் உள்ள மருத்துவர்கள் தங்களின் முழுவிவரங்கள் அடங்கிய விண்ணப்பத்தினை ovemcldr@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு உடனடியாக அனுப்பிவைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு 044-22505886/ 22502267 என்ற தொலைபேசி மூலமாகவோ அல்லது www.omcmanpower.com என்ற வலைதளத்திலும் அறிந்து கொள்ளலாம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x