செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் குறுக்கு விசாரணை

செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் குறுக்கு விசாரணை
Updated on
1 min read

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின்கீழ் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வந்துள்ளார்.

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை முதன்மை நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பாக நடந்தது. அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜரானார். அதேபோல அமலாக்கத் துறைதரப்பு சாட்சியான தடயவியல்துறை உதவி இயக்குநர் மணிவண்ணனும் ஆஜராகியிருந்தார். அப்போது அமைச்சர் தரப்புவழக்கறிஞர் இளங்கோ, விசாரணையை தள்ளிவைக்க கோரினார். அதற்கு அமலாக்கத் துறை வழக்கறிஞர் என்.ரமேஷ் ஆட்சேபம் தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதியும், அரசு தரப்பு சாட்சி தற்போது ஆஜராகியுள்ளார். எனவேசாட்சி விசாரணை இன்றே மேற்கொள்ளப்படும் என்றார். அதையடுத்து சாட்சி மணிவண்ணனிடம் செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் ம.கவுதமன் குறுக்கு விசாரணை நடத்தினார். இந்த விசாரணை முடிவடையாத நிலையில், விசாரணையை வரும் அக்.29-க்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in