Published : 18 Jun 2018 09:24 am

Updated : 18 Jun 2018 09:24 am

 

Published : 18 Jun 2018 09:24 AM
Last Updated : 18 Jun 2018 09:24 AM

சாலை பழுதானதால் பேருந்து சேவை நிறுத்தம்

அகரம்தென் - வேங்கடமங்கலம் சாலை மிகவும் பழுதடைந்துள்ளதால், அந்த வழியாக மாநகரப் பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள், மாணவர்கள் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.

கிழக்கு தாம்பரத்தில் இருந்து சேலையூர் - கேம்ப்ரோடு, அகரம்தென், வேங்கடமங்கலம் வழி யாக மாநகரப் பேருந்து (தடம் எண் 51ஏ) இயக்கப்பட்டு வந்தது. இந்தப் பேருந்து சேவையால் கண்டிகை, வேங்கடமங்கலம், அகரம்தென், பதுவஞ்சேரி, திருவஞ்சேரி பகுதி மக்கள் பெரிதும் பயனடைந்தனர். குறிப்பாக அப்பகுதிகளைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந் தது.


இந்தப் பேருந்து இயக்கப்படும் அகரம்தென் - வேங்கடமங்கலம் இடையிலான சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால், இந்த வழியாக வரும் பேருந்துகள் அடிக்கடி பழுதாகி நின்று விடுகின்றன. சாலையில் உள்ள பள்ளங்களில் வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்து காயமடைகின்றனர்.

இதில் ஒரு பக்க சாலை, புனித தோமையர் மலை ஒன்றியத்தின் கீழும், இன்னொரு பக்க சாலை காட்டாங்கொளத்தூர் ஒன்றியத் தின் கீழும் வருகிறது. இந்த சாலையை சீரமைக்குமாறு மாநகரப் போக்குவரத்து கழக அதி காரிகளும், பொதுமக்களும் புனித தோமையார் மலை, காட்டாங்கொளத்தூர் ஒன்றிய நிர்வாகங்களுக்கு புகார் கொடுத்தனர். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதேபோல மாவட்ட நிர்வாகமும் நட வடிக்கை எடுக்கவில்லை. இதனால், இப்பகுதியினர் அதிகப் பணம் கொடுத்து ஆட்டோக்களில் செல்லவேண்டி இருக் கிறது.

இந்த நிலையில், இச்சாலை வழியாக பேருந்து இயக்கப் படுவது கடந்த சில நாட்களாக நிறுத்தப்பட்டு விட்டது. இச் சாலையை உடனே சீரமைத்து மீண்டும் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று அரசுக்குப் பொதுமக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.


Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x