பருவமழை முன்னெச்சரிக்கை: தாழ்வான பகுதிகளில் படகுகளை நிறுத்தும் சென்னை மாநகராட்சி

மாநகராட்சி சார்பில் வாங்கப்பட்ட படகுகள், வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளுக்கு லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது.
மாநகராட்சி சார்பில் வாங்கப்பட்ட படகுகள், வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளுக்கு லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது.
Updated on
1 min read

சென்னை: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநகரின் தாழ்வான பகுதிகளில் சென்னை மாநகராட்சி சார்பில் படகுகள் நிறுத்தப்பட்டு வருகிறது.

சென்னை மாநகரம் அடிக்கடி பெருமழை, பெருவெள்ளத்தை சந்தித்து வருகிறது. கடந்த ஆண்டு மிக்ஜாம் புயல் தாக்கத்தால் வரலாறு காணாத பெருமழை, பெருவெள்ளம் ஏற்பட்டது. அப்போது மாநகரின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டது. அப்போது மாநகராட்சி சார்பில் பொதுமக்களை மீட்கவும், அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லவும், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு படகுகளை கொண்டு செல்ல முடியாத சூழல் நிலவியது.

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இம்மாதம் 3-வது வாரத்தில் தொடங்க உள்ளது. இம்முறை வட மாவட்டங்களில் வழக்கத்தை விட அதிகமாக பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதற்கிடையில் கடந்த திங்கள்கிழமை முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பருவமழை முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டத்தில், "மழை, வெள்ளத்தால் ஒரு உயிரிழப்பு கூட ஏற்படக்கூடாது. அந்த நோக்கத்தோடு அரசு இயந்திரம் விரைவாக செயல்பட வேண்டும். அதற்கேற்ப தேவையான இயந்திரங்கள் மற்றும் படகுகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்" என அறிவுறுத்தி இருந்தார்.

இந்நிலையில், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநகராட்சி சார்பில் 36 படகுகள் வாங்கப்பட்டுள்ளன. வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய மாதவரம், பெருங்குடி ஆகிய மண்டலங்களில் இவற்றில் சில படகுகள் கொண்டு சென்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மற்ற மண்டலங்களுக்கும் இதேபோல் படகுகளைக் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in