Published : 03 Oct 2024 05:49 AM
Last Updated : 03 Oct 2024 05:49 AM
சென்னை: தூய்மையே சேவை பிரச்சார இயக்கத்தின் கீழ், மத்திய அரசு அலுவலகங்களில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மத்திய அரசு தூய்மை இந்தியாஇயக்கத்தை தொடங்கி 10 ஆண்டுகள் ஆகின்றன. இதை முன்னிட்டு, சென்னை துறைமுகம் சார்பில், கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணி நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சென்னை துறைமுகம் மற்றும் காமராஜர் துறைமுகம் தலைவர் சுனில் பாலிவால், சென்னை துறைமுக துணைத் தலைவர் எஸ்.விஸ்வநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வருமானவரித் துறை சார்பில், சென்னை அண்ணாநகரில் உள்ள மத்திய அரசு ஊழியர்கள் குடியிருப்பு வளாகத்தில் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது. இதில்,சென்னை மற்றும் புதுச்சேரி முதன்மை தலைமை ஆணையர் சுனில் மாத்தூர் தூய்மைப் பணியைத் தொடங்கி வைத்து ஊழியர்களுடன் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய சுனில் மாத்தூர், ‘காந்தியடிகள் தூய்மைக்கு முக்கியத்துவம் கொடுத்ததோடு, அதற்கு உதாரணமாகவும் திகழ்ந்தார். எனவே, பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் இடங்களைச் சுற்றிதூய்மையாக வைத்திருக்க வேண்டும்’ என்றார்.
இதேபோல், ஆவடியில் உள்ளஇந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில்,பெசன்ட் நகர் கடற்கரையில் தூய்மைப் பணி நடைபெற்றது. வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் அஜய்குமார் வத்சவா, செயலாக்க இயக்குநர்கள் ஜாய்தீப் தத்தா ராய்மற்றும் டி. தனராஜ் மற்றும் வங்கியின் மூத்த அதிகாரிகள், பணியாளர்கள் பங்கேற்று தூய்மைப் பணியை மேற்கொண்டனர்.
காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் இந்திய ஏற்றுமதி நிறுவனத்தின் துணை இயக்குநர் ஜெயபாலன், தமிழக மீன்வளத் துறை இணை இயக்குநர் சர்மிளா, கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் சங்க துணைத் தலைவர் ஜெகன் உள்ளிட்டோர் பங்கேற்று தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT