அனுமதியின்றி ஆழ்துளை கிணறு தோண்டினால் 7 ஆண்டு சிறை: சட்ட மசோதா தாக்கல்

அனுமதியின்றி ஆழ்துளை கிணறு தோண்டினால் 7 ஆண்டு சிறை: சட்ட மசோதா தாக்கல்
Updated on
1 min read

அரசு அனுமதி இல்லாமல் ஆழ்துளைக் கிணறுகள் தோண்டினால் 3 முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் ரூ.50 ஆயிரம் வரை அபராதமும் விதிக்க வகை செய்யும் சட்ட மசோதா பேரவையில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.

சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்துள்ள மசோதாவில் கூறியிருப்பதாவது:

ஆழ்துளைக் குழாய் கிணறு களின் உரிமையாளர்கள் மற்றும் அத்தகைய கிணறுகளைத் தோண்டும் தொழில் செய்பவர் களின் அக்கறையின்மையால் சிறு குழந்தைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் நடக்கின்றன.

இதைத் தடுக்கும் வகை யில், ஆழ்துளைக் கிணறு, ஆழ்குழாய் கிணறு, திறந்த வெளிக் கிணறுகளை ஒழுங்கு முறைப்படுத்தும் வகையில் 1994-ம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தை (தமிழ்நாடு சட்டம் 21/1994) திருத்துவதென அரசு முடிவு செய்துள்ளது.

இச்சட்டத்தின்படி, திறந்த வெளிக்கிணறு, ஆழ்துளை கிணறு, வடிகட்டும் இடம், சேகரிப்புக் கிணறு அல்லது வடித் தெடுக்கும் சுரங்க நிலவரை வழி ஆகியன இந்தச் சட்டத்தின்கீழ் அடங்கும்.

கிணறு தோண்ட விரும்பும் நபர், அதற்கான அனுமதியைப் பெறுவதற்கு நிர்வாக அதிகார அமைப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும். அனுமதி வாங் காமல் கிணறு தோண்டக் கூடாது. கிராம ஊராட்சியில் வியாபார நோக்கத்துக்காக கிணறு தோண்ட விரும்பினால் அதற்கான பதிவுச் சான்று பெறுவதற்கு மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப் பிக்க வேண்டும்.

கிணறு தோண்டும் தொழில் செய்பவர், கிணறு தோண்டும் போதும் தோண்டப்பட்ட கிணற்றை மூடும்போதும் பாது காப்பு முறைகளைப் பின்பற்ற வேண்டும்.

உரிய அனுமதி இல்லாமல் அல்லது பதிவு சான்று இல்லாமல் கிணறு தோண்டினால் 3 ஆண்டுகளுக்கு குறையாத, 7 ஆண்டுகள் வரை நீட்டிக்கத்தக்க சிறை தண்டனையும் ரூ.50 ஆயிரம் வரை அபராதமும் விதிக்கப்படும். இவ்வாறு மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in