அகவிலைப்படி உயர்வு கோரி துணை முதல்வருக்கு போக்குவரத்து ஓய்வூதியர்கள் கடிதம்

அகவிலைப்படி உயர்வு கோரி துணை முதல்வருக்கு போக்குவரத்து ஓய்வூதியர்கள் கடிதம்
Updated on
1 min read

சென்னை: அகவிலைப்படி உயர்வு வழங்கக் கோரி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர்.

இது தொடர்பாக அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நல மீட்பு சங்கத் தலைவர் டி.கதிரேசன், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ‘அதிமுக ஆட்சி காலத்தில் அகவிலைப்படி உயர்வை நிறுத்தி போக்குவரத்து ஓய்வூதியர்களை வஞ்சித்தது தொடர்பாக நீங்களே பல இடங்களில் பேசியுள்ளீர்கள். அப்போது நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் இருந்தன.

இப்போது பல்வேறு வழக்குகளில் ஓய்வூதியர்களுக்கு ஆதரவான தீர்ப்புகள் வந்துள்ளன. ஓய்வூதியம் பெறும் 93,000-க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்களில் 95 சதவீதம் பேர் களப் பணியாளர்கள். இவர்கள் குறைந்தளவில் ஓய்வூதியம் பெற்று வறுமையில் வாடி வருகின்றனர். இவர்களின் நலன் கருதி வழக்கில் மேல்முறையீடு செய்யாமல் அகவிலைப்படி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in