முதல்வர் ஸ்டாலின் மூலவர், உதயநிதி உற்சவர்: அமைச்சர் ரகுபதி கருத்து

அமைச்சர் ரகுபதி | கோப்புப்படம்
அமைச்சர் ரகுபதி | கோப்புப்படம்
Updated on
1 min read

புதுக்கோட்டை: தமிழக சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

அமைச்சரவை மாற்றம் தற்போது அடிக்கடி நடப்பதில்லை.முன்னாள் முதல்வர் ஜெயலலிதாஆட்சியில், எந்த அமைச்சர் பதவியில் இருக்கிறார், யார் இல்லை என்பதை செய்தியைப் பார்த்துத்தான் தெரிந்துகொள்ள வேண்டும். அந்த அளவுக்கு அமைச்சர்கள் அச்சத்துடன் இருந்தனர். ஆனால், திமுக ஆட்சியில் அமைச்சர்கள் சுதந்திரமாக செயல்படும் சூழலை முதல்வர் உருவாக்கியுள்ளார்.

மது ஒழிப்பை நாடு முழுவதும் கொண்டுவந்தால், தமிழகத்திலும் அதை செயல்படுத்த திமுகவுக்கு எந்த தயக்கமும் இல்லை. மற்ற மாநிலங்களில் மதுவிலக்கு இல்லாமல், தமிழகத்தில் மட்டும் மதுஒழிப்பை கொண்டுவந்தால், கள்ளச் சாராயம் பெருகிவிடும்.

தமிழக அரசு இயந்திரத்தைமுதல்வர் ஸ்டாலின் முடுக்கிவிட்டுக் கொண்டிருக்கிறார். துணை முதல்வர் உதயநிதி, அதை செயல்படுத்திக் கொண்டு இருக்கிறார். எங்களைப் பொறுத்தவரை மூலவர் முதல்வர் என்றால், உற்சவர் துணை முதல்வர். இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in