Published : 02 Oct 2024 06:10 AM
Last Updated : 02 Oct 2024 06:10 AM

காந்தி ஜெயந்தியையொட்டி இன்று மதுக்கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு

சென்னை: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று டாஸ்மாக் மதுக்கடைகள் மற்றும் பார்களை மூட மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: காந்தி ஜெயந்தி தினத்தில் தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின் கீழ், சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் (எப்எல்-1) மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், அதைச் சார்ந்த பார்கள், எப்எல்-2 உரிமம் கொண்ட கிளப்புகளைச் சேர்ந்த பார்கள், எப்எல்-3 உரிமம் கொண்ட ஓட்டல்களைச் சேர்ந்த பார்கள் மற்றும் எப்எல்-3 (ஏ),எப்எல்-3(ஏஏ) உரிமம் கொண்டபார்கள் அனைத்தும் கண்டிப்பாகமூடப்பட்டிருக்க வேண்டும். மதுபானம் விற்பனை செய்யக் கூடாது. தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x