Published : 02 Oct 2024 05:54 AM
Last Updated : 02 Oct 2024 05:54 AM

வள்ளலார், காந்தியடிகளின் கொள்கைகளை எல்லா தலைமுறைக்கும் கொண்டு செல்லவேண்டும்: முன்னாள் நீதிபதி ராமசுப்பிரமணியம்

ராமலிங்கர் பணிமன்றம், ஏ.வி.எம். அறக்கட்டளையுடன் இணைந்து நடத்திய 57-ம் ஆண்டு அருட்பிரகாச வள்ளலார் - மகாத்மா காந்தி விழா சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் நேற்று தொடங்கியது. இதில் உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி வி.ராமசுப்பிரமணியம், ராமலிங்கர் பணிமன்ற தலைவர் ம.மாணிக்கம், தவத்திரு பொன்னம்பல அடிகளார், கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம், கலைமாமணி டி.கே .எஸ்.கலை வாணன் கிருங்கை சே துபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். | படம்: ம.பிரபு |

சென்னை: வள்ளலார் வழியைப் பின்பற்றிய காந்தியடிகள் தனது சொந்த நலனுக்காக ஒருபோதும் சட்டமறுப்பை கையில் எடுத்ததில்லை. இருவரின் கொள்கைகளை ஒவ்வொரு தலைமுறைக்கும் கொண்டுசெல்ல வேண்டும் என்று சென்னையில் நேற்று நடைபெற்ற விழாவில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ராமசுப்பிரமணியம் கேட்டுக் கொண்டார்.

ராமலிங்கர் பணிமன்றம், ஏ.வி.எம். அறக்கட்டளையுடன் இணைந்து 57-வது அருட்பிரகாச வள்ளலார், மகாத்மா காந்தி விழாவின் 3 நாட்கள் தொடக்க விழாசென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள திருவாவடுதுறை டி.ஆர்.ராஜரத்தினம் கலை அரங்கில் நேற்று நடைபெற்றது.

காந்தியத்தை பரப்புவது... இவ்விழாவுக்கு தலைமை வகித்து உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ராமசுப்பிரமணியம் பேசியதாவது: அருட்செல்வர் நா.மகாலிங்கத் தின் வழியில் அவரது மகன் மாணிக்கம் தொடர்ந்து வள்ளலாரின் சன்மார்க்கத்தையும் காந்தியடிகளின் காந்தியத்தையும் பரப்பி வருவது பாராட்டுக்குரியது. காந்தி ஒருமுறை சிறையில் இருந்தபோது அவரைப் பார்க்க அவரது மனைவி வந்தார்.

சிறை விதிகளின்படி இருவரும் சிறைக்காவலர் முன்னிலையில்தான் பேச வேண்டும். அவர்கள் பேசும்போது அங்கிருப்பது அநாகரிகம் என கருதிய சிறைக்காவலர் வெளியே போய்விட்டார். அவர் திரும்பி வரும்வரை காந்தியும் அவரது மனைவியும் பேசா மலேயே இருந்தனர்.

அதுகுறித்து சிறைக்காவலர் கேட்டபோது நீங்கள் இல்லாததால் நாங்கள் இருவரும் பேசிக்கொள்ளவில்லை என்று காந்தி தெரிவித்துள்ளார். சொந்த நலனுக்காக சட்டமறுப்பை காந்தி ஒருபோதும் கையில் எடுத்ததில்லை என்பதற்கு இது ஒரு உதாரணம். வள்ளலார் வழியைத்தான் காந்தி பின்பற்றினார். இவர்களின் கொள்கைகளை, வாழ்வியலை ஒவ்வொரு தலைமுறைக்கும் கொண்டு செல்ல வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

எண்ணற்ற ஒற்றுமைகள்: அதையடுத்து குருமகாசன்னி தானம் தவத்திரு. பொன்னம்பல அடிகளார் பேசும்போது, ‘‘வள்ளலாருக்கும் காந்திக்கும் எண்ணற்றஒற்றுமைகள் உண்டு. துறந்தவற்றை திரும்பிப் பார்க்காமல் இருப்பதே துறவு ஆகும். அப்படித்தான் வள்ளலாரும் காந்தியடிகளும் வாழ்ந்தனர்.

வள்ளலார், காந்தியடிகள் வழியில் தற்போதைய ஆன்மிக வழிபாடு இருக்கிறதா என்று சிந்திக்க வேண்டியுள்ளது. சன்மார்க்க நிலையில், காந்திய வழியில் மானுடம் பயணித்தால் அதுவே மனிதகுல மேம்பாடாகும்’’ என்று தெரிவித்தார்.

ராமலிங்கர் பணிமன்றத் தலைவர் டாக்டர் ம.மாணிக்கம் வரவேற்புரையாற்றி பேசும்போது, “ஆங்கில மொழியில் ஆண்டுக்கு 5 லட்சம் புத்தகங்கள் வெளியாகின் றன. ஆனால், தமிழ் மொழியில் 5 ஆயிரம் புத்தகங்களே வெளியிடப்படுகின்றன. உலகில் எந்த மொழியில் தலைசிறந்த புத்தகங்கள் வெளியானாலும் அவற்றை 90 நாட்களில் ஜப்பானிய மொழியில் மொழிபெயர்க்கிறார்கள். அந்த நாட்டில் ஆங்கில மொழி கிடை யாது.

தமிழ்நாட்டில் உணவும், சைக்கிளும் கொடுத்தால் போதாது. தலைசிறந்த நூல்களை மாணவர்களுக்கு கொடுத்து படிக்கச் செய்ய வேண்டும். அப்போதுதான் தமிழகம் உன்னத நிலையை அடையும். தாய்மொழியில் படிப்பது சுலபம் என்பதால் தமிழில் எண்ணற்ற நூல்கள் வெளிவர வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டார்.

அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மைய இயக்குநர் கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் பேசும்போது, “சமரசத்தின் அடையாளமாக வள்ளலாரும் காந்தியடிகளும் திகழ்ந்தனர். அவர்களைமாணவர்கள் மனதில் உள்வாங்கி யிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது’’ என்று தெரிவித்தார். நிறைவில், கிருங்கை சேதுபதி நன்றி கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x