Published : 22 Jun 2018 07:42 AM
Last Updated : 22 Jun 2018 07:42 AM

விவசாயிகளுக்கு ரூ.7 கோடி இழப்பீடு: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தகவல்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் விவசாயிகளுக்கு ரூ.7 கோடி அளவுக்கு காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா தெரிவித்தார்.

காஞ்சிபுரம் அருகே உள்ள பரந்தூர் ஊராட்சியில் மனுநீதி நாள் முகாம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த முகாமில் நலத்திட்ட உதவிகளை வழங்கி மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா பேசியது:

இந்த மனுநீதிநாள் முகாமில் முதியோர் உதவித் தொகை, திருமண உதவித் தொகை, பட்டா மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பலர் மனுக்களை அளித்துள்ளனர். இந்த முகாம் நடைபெறுவதற்கு 15 நாட்களுக்கு முன்பு மனு அளித்தவர்களுக்கு தீர்வு கண்டு இன்றே நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இந்தக் கூட்டத்தில் ஏரி, குளம், மதகு போன்றவற்றை சீரமைத்துத் தர கோரப்பட்டுள்ளது. அந்த கோரிக்கைகளின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். காஞ்சிபுரம் மாவட் டத்தில் காப்பீட்டு திட்டத்தின் கீழ் நடப்பு ஆண்டில் இதுவரை விவசாயிகளுக்கு ரூ.7 கோடி அளவுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவன அலுவலர்களிடம் கலந்து பேசி கோரிக்கை மனு அளித்தவர்களுக்கும் காப்பீட்டுத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இந்த மனுநீதிநாள் முகாமில் 285 பயனாளிகளுக்கு ரூ.15.56 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சிக்கு முன் வேளாண்மைத் துறை, தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை, கால்நடை பராமரிப்புத் துறை உள்ளிட்ட துறைகள் சார்பில் அமைக்கப்பட்டுள்ள பொருட்காட்சி அரங்குகளையும், சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட மருத்துவ முகாமையும் ஆட்சியர் பா.பொன்னையா பார்வையிட்டார்.

காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கள் வாலாஜாபாத் பா.கணேசன், வி.சோமசுந்தரம், முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் காஞ்சி பன்னீர்செல்வம், வரு வாய் கோட்டாட்சியர் ராஜு உட்படப் பலர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x