Published : 12 Jun 2018 08:29 AM
Last Updated : 12 Jun 2018 08:29 AM

அடுத்த 4 ஆண்டுகளில் 40 ராக்கெட்கள் தயாரிக்க திட்டம்: இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்

4 ஆண்டுகளில் 40-க்கும் மேற்பட்ட ராக்கெட்கள் தயாரிக்கப்பட உள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.

இதுதொடர்பாக சென்னை விமான நிலையத்தில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மத்திய அரசு கடந்த 6-ம் தேதி ரூ.10,400 கோடி செலவில் 30 பிஎஸ்எல்வி ராக்கெட்களையும், 10 கனரக ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட்களையும் தயாரிக்க ஒப்புதல் அளித்துள்ளது. இவ்வளவு அதிக தொகைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது இஸ்ரோ வரலாற்றில் இதுவே முதல் முறை.

அடுத்த 4 ஆண்டுகளில் 40-க்கும் மேற்பட்ட ராக்கெட்கள் உருவாக்கப்படுவதால் 10,000-க் கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். மீனவர்களுக்கு தேவை யான உபரணங்களையும் இஸ்ரோ தயாரித்துள்ளது. அதில் 500 உபகரணங்கள் தமிழக மீனவர்களுக்கும், 200 உபகரணங்கள் கேரள மீனவர்களுக்கும் வழங்கப்பட உள்ளன. மீன்பிடித் தடைக்காலம் முடிந்த பிறகு மீனவர்களிடம் அவை வழங்கப்படும்.

சந்திராயன்-2 நடப்பாண்டு இறுதிக்குள் விண்ணில் செலுத்தப்படும். அதேபோல, நடப்பாண்டில் ஜிசாட்-29, ஜிசாட்-11 ஆகிய செயற்கைக்கோள்களும் விண்ணில் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x