“வாரிசு, ஊழல் அரசியலை தாங்க பலமான இதயம் வேண்டும்” - வானதி சீனிவாசன் கருத்து

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்
Updated on
1 min read

கோவை: “வாரிசு அரசியலையும், ஊழல் அரசியலையும் தாங்க வேண்டும் என்றால் இதயத்தை பலமாக வைத்திருக்க வேண்டும்” என வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

உலக இதய தினத்தை முன்னிட்டு கோவை பந்தய சாலை பகுதியில் தனியார் மருத்துவமனை சார்பில் இதய விழிப்புணர்வு நடைப்பயண நிகழ்ச்சி இன்று (செப்.29) காலை நடந்தது. பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “அரசியலில் இன்று நடக்கும் வாரிசு அரசியலையும், ஊழல் அரசியலையும் தாங்க வேண்டும் என்றால் இதயத்தை பலமாக வைத்திருக்க வேண்டும். அதனால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்க உள்ளது குறித்து இதயத்தை பலப்படுத்தி விட்டு வந்த பின் வாழ்த்து கூறுகிறேன்.” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in