பழைய அரசு வாகனங்கள் மேலும் ஓராண்டுக்கு பயன்படுத்த அனுமதி

பழைய அரசு வாகனங்கள் மேலும் ஓராண்டுக்கு பயன்படுத்த அனுமதி
Updated on
1 min read

சென்னை: கடந்த ஆண்டு ஏப். 1-ம் தேதிக்கு பிறகு 15 ஆண்டுகளுக்கு மேலான வாகனங்களை பயன்படுத்த மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் தடை விதித்தது.

இந்நிலையில், உள்துறைச் செயலர் தீரஜ் குமார் பிறப்பித்த அரசாணை: தமிழகத்தைப் பொருத்தவரை அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் உட்பட 15 ஆண்டுகளுக்கு மேலாக 6,247 வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன. இவற்றின் உரிமத்தை உடனடியாக ரத்து செய்யும் பட்சத்தில் ஏராளமானோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.

எனவே, அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் உட்பட அரசுத்துறை, உள்ளாட்சி அமைப்புகளுக்குச் சொந்தமான 15 ஆண்டுகளுக்கு மேலான 6,247 வாகனங்களுக்கு வரி, கட்டணம்போன்றவற்றை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் நேரடியாக வசூலித்து, பதிவுச் சான்றை புதுப்பித்து வழங்கலாம். செல்லுபடியாகும் காலத்தை அடுத்த ஆண்டு செப்.30 வரை நீட்டித்து உத்தரவிடப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in