Published : 14 Aug 2014 10:00 AM
Last Updated : 14 Aug 2014 10:00 AM

பூ கட்டுவோருக்கு தனி நலவாரியம்: மாநில மாநாட்டில் தீர்மானம்

பூக்கட்டுவோருக்கு தனி வாரியம் வேண்டும் என்று பூக்கட்டுவோர் பேரவையின் மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. தமிழ்நாடு பூக்கட்டுவோர் பேரவையின் முதலாம் ஆண்டு மாநில மாநாடு, பூந்தமல்லி நெடுஞ் சாலையில் உள்ள வேலப்பன் சாவடி கஜலட்சுமி திருமண மண்டபத்

தில் புதன்கிழமை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பேரவையின் சென்னை மாநகரத் தலைவர் எஸ்.கோதண்டன் வரவேற்புரையாற்றினார். சமரச சுத்த சன்மார்க்க சங்கம் வடலூர் ஊரன் அடிகள் ஆண்டு விழா மலரை வெளியிட, முன்னாள் டிஜிபி ஆர்.நடராஜ் பெற்றுக் கொண்டார். முன்னாள் தமிழக அரசு செயலாளர் ஜி.சந்தானம், பேரவையின் நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் எஸ்.வேதாந்தம்ஜி, திருவாவடுதுறை ஆதீன மடம் சுந்தரமூர்த்தி தம்பிரான், அறங்காவலர் ஆர்.ஆர்.கோபால்ஜி, பேராசிரியர் சாமி. தியாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

பூக்கட்டுபவர்கள் மற்றும் தெருக் களில் அலைந்து பூ வியாபாரம் செய்பவர்கள் பெரும்பாலும் வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ள ஏழைத் தாய்மார்கள்தான். எனவே அவர்களுக்கு அரசு தனி நல வாரியம் அமைக்க வேண்டும்.

அரசு பஸ்களில் விவசாயிக ளுக்கு சுமை கட்டண சலுகை வழங்குவது போல் பூக்களை வாங்கி வருபவர்களுக்கும் வழங்க வேண்டும். வேளாண் பொருட் களை விற்பதற்காக உழவர் சந்தை உள்ளதுபோல் பூமாலை கட்டுப வர்களுக்கு தனி வணிக வளாகம் வேண்டும். அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஆயிரக்கணக்கான கோயில்களில் நந்தவனம் பராமரிப்பின்றி காணப்படுகிறது.

இதனை அந்தந்தப் பகுதியில் உள்ள பூ வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களைக் கொண்டு பராமரித்தால், கோயில் பூஜைக்குத் தேவையான பூக்களை நந்தவனத்தில் இருந்தே பெற்றுக் கொள்ளலாம். இதற்கு அறநிலையத்துறை ஏற்பாடு செய்ய வேண்டும்.

பூ வியாபாரிகளுக்கும், பூக்கட்டுபவர்களுக்கும் மத்திய, மாநில அரசுகள் தொழில் வளர்ச்சி கடன் வழங்க வேண்டும். மலர் வணிக வளாகத்தில் மலர் மாலைக்கு என தனி இடம் ஒதுக்க வேண்டும். வணிக வளாகத்தில் அம்மா உணவகம், சுகாதார நிலையம், அடிப்படை வசதிகள் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x