Published : 28 Sep 2024 05:45 AM
Last Updated : 28 Sep 2024 05:45 AM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் செப். 28-ம் தேதி (இன்று) நடைபெற உள்ள திமுக பவள விழா பொதுக் கூட்டத்துக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. போக்குவரத்து மாற்றம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி திடலில் திமுக பவள விழா பொதுக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த பவள விழா பொதுக் கூட்டத்தில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசுகிறார். திமுகவின் முக்கிய அமைச்சர்கள், கூட்டணிக் கட்சித் தலைவர்களும் பங்கேற்க உள்ளனர். முதல்வரின் வருகையை முன்னிட்டு போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகம் வெளியிட்ட அறிக்கை: செப். 28-ம் தேதி காஞ்சிபுரம் மாநகரத்தில் நடைபெற உள்ள திமுக பவள விழா பொதுக் கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரம் வர உள்ளார்.
இது குறித்து பாதுகாப்பு நிமித்தமாக போக்குவரத்துக்கு இடையூறு ஏதுமில்லாமல் பொன்னேரிக்கரை வழியாக காஞ்சிபுரம் நகரத்துக்குள் வரும் வாகனங்கள் மாற்று பாதையான கீழம்பி மற்றும் வெள்ளைகேட் வழியாக செல்ல வேண்டும். காஞ்சிபுரத்திலிருந்து செங்கல்பட்டுக்கு செல்லும் வாகனங்கள் பழைய ரயில் நிலையம் வையாவூர் வழியாக செல்ல வேண்டும்.
மேலும் சென்னை, தாம்பரம், ஆவடி, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலிருந்து விழாவுக்கு வரும் தொண்டர்கள் பொதுமக்கள் ஆகியோர் வாலாஜாபாத், முத்தியால்பேட்டை வழியாகவும், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களிலிருந்து வருபவர்கள் கீழம்பி செவிலிமேடு, ஓரிக்கை ஜங்சன், பெரியார் நகர் வழியாகவும், விழுப்புரம், திண்டிவனம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிலிருந்து வருபவர்கள் செவிலிமேடு, ஓரிக்கை ஜங்சன், பெரியார் நகர் வழியாகவும் விழா நடைபெறும் இடமான காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மைதானத்துக்கு வரலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT