Published : 28 Sep 2024 06:02 AM
Last Updated : 28 Sep 2024 06:02 AM
சென்னை: தரமற்ற விதைகளை விநியோகிக்கும் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், தேவைப் படும்பட்சத்தில் நீதிமன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் அமைச்சர் தலைமையில், விதைச்சான்றளிப்பு மற்றும் உயிர்மச் சான்றளிப்புத் துறை ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், விதைச் சான்றளிப்பு, விதை ஆய்வு,விதைப் பரிசோதனை மற்றும்உயிர்மச் சான்றளிப்பு தொடர் பான திட்டங்கள் குறித்து அதிகாரிகளிடம் அமைச்சர் கேட்டறிந்தார். அப்போது அவர் பேசியதாவது:
விவசாயிகள் தரமான சான்றுபெற்ற விதைகளையே பயன்படுத்த வேண்டும். மாவட்டங்களில்அதிகாரிகள் விதை அமலாக்கச் சட்டத்தை தீவிரமாகச் செயல் படுத்தி தரமற்ற விதைகள் விவசாயி களுக்கு சென்றடைவதை தடுக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
நீதிமன்ற நடவடிக்கை: விதைச் சட்டங்களின் அடிப்படையில் தரமற்ற விதைகளைவிநியோகிக்கும் விற்பனையாளர் கள் மீது துறை மூலம் நட வடிக்கை எடுக்க வேண்டும். தேவைப்படும்பட்சத்தில் நீதிமன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ள லாம்.
மேலும், ஒவ்வொரு நாற்றங்கால் பண்ணை வைத்திருப்போரும் கட்டாயம் உரிமம் பெற வேண்டும் பழ மரக்கன்றுகள், தென்னங்கன்று கள் உற்பத்தி செய்யும் நாற்றாங் கால் உரிமையாளர்கள், எந்த விதையின் மூலம் அல்லது ஒட்டு மூலம் உற்பத்தி செய்கிறார் என்ற விவரம் கட்டாயம் பராமரிக்கப்பட வேண்டும். நாற்றாங்காலில் பயிரின் பெயர், ரகத்தின் பெயர், பதியம் செய்த உற்பத்தியாளரின் முகவரி ஆகியவற்றை குறிப்பிட்டு விற்பனை செய்யப்பட வேண்டும்.
காய்கறி நாற்றுக்களும் பழமரக்கன்றுகளும் விற்பனை செய்யும்பொழுது விற்பனை ரசீது கட்டாயம்வழங்கப்பட வேண்டும். இவற்றைப் பின்பற்றாத நாற்றாங்கால் உரிமையாளர்களின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். விதையின் தரத்தை அறிந்துகொள்ள விவசாயி அல்லது நிறுவனம் விதை மாதிரி களை விதை பரிசோதனை நிலையங்களுக்கு அனுப்பி ஒரு மாதிரிக்கு ரூ.80 செலுத்தி தங்களது விதைகளின் தரத்தை தெரிந்துகொள்ளலாம். இவ்வாறு அமைச்சர் தெரி வித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT