Last Updated : 25 Aug, 2014 10:22 AM

 

Published : 25 Aug 2014 10:22 AM
Last Updated : 25 Aug 2014 10:22 AM

60 ஆண்டுகளாக மணலில் புதைந்து கிடந்த தருமர் தீர்த்தம்: புனரமைக்கும் பணிகள் தொடக்கம்

ராமேசுவரத்தில் 60 ஆண்டுகளுக்கு முன்னர் மணலில் புதையுண்ட தருமர் தீர்த்தம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டு புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ராமேசுவரம் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான 50-க்கும் மேற்பட்ட புனித தீர்த்தக் குளங்கள் ராமேசுவரம் தீவில் மட்டுமே அமைந் துள்ளன. இவற்றில் ராமநாதசுவாமி கோயிலின் உள்ளே 22 தீர்த்தங் களும் அடக்கம். இந்த தீர்த்தங் களில் நீராடி தங்களின் பாவங்கள், தோஷங்களைப் போக்க நாட்டின் அனைத்துப் பகுதி களில் இருந்தும் தினமும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் ராமேசுவரம் வருகின்றனர்.

மொத்தமுள்ள 108 தீர்த்தங் களில் சில தீர்த்தங்கள் தனியார் ஆக்கிரமிப்பு, இயற்கை சீற்றங்களால் அழிவுக்குள்ளாகி யும் இருந்தன. இந்த தீர்த்தங்களைக் கண்டுபிடித்து, முள்புதர்களை அகற்றி, சுற்றுச்சுவர் எழுப்பி, பக்தர்கள் செல்வதற்கு ஏதுவாக முதல்கட்டமாக ரூ.1.5 கோடியில் 20 தீர்த்தங்களைக் கண்டறிந்து, அவற்றைப் புனரமைக்கும் பணியில் கன்னியாகுமரி விவேகா னந்த கேந்திரம், இயற்கை வள அபிவிருத்தி திட்டத்தின்கீழ் கடந்த ஓராண்டு காலமாக ஈடுபட்டு வருகிறது.

இதுவரை அகஸ்தியர், அனுமன், திரௌபதி, சகாதேவன், நகுலன், அர்ஜுனன், பீமன், ஜாம்பவான், அங்கதன், சுக்ரீவன், மங்கலன், ருண விமோசனா, அமிர்தவாபி, ஜடாயு ஆகிய தீர்த்தங்கள் புனரமைக்கப்பட்டுள்ளன.

இதன் ஒருபகுதியாக ராமேசு வரம் கெந்தமாதன பர்வதம் பகுதி யில் 60 ஆண்டுகளாக மண்மேடால் மூடப்பட்டிருந்த தருமர் தீர்த்தம் கண்டறியப்பட்டு தூர்வாரும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

தூர்வாரும் பணிகளை விவே கானந்த கேந்திரத்தின் ராமேசுவரம் கிளை பொறுப்பாளர் சரஸ்வதி அம்மாள், கதிரேசன் மற்றும் திருக்கோயில் இணை ஆணையர் செல்வராஜ், உதவிக் கோட்ட பொறியாளர் மயில்வாகனன் ஆகியோர் மேற்பார்வையிட்டு வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x