வேட்டி விவகாரம்: அரசு சட்டம் இயற்றியதால் உயர் நீதிமன்ற வழக்கு முடித்துவைப்பு

வேட்டி விவகாரம்: அரசு சட்டம் இயற்றியதால் உயர் நீதிமன்ற வழக்கு முடித்துவைப்பு
Updated on
1 min read

பொது இடங்களில் வேட்டி அணி வதற்கு உள்ள கட்டுப்பாடுகளை நீக்குவதற்கான சட்டம் தமிழக சட்டப்பேரவையில் இயற்றப்பட்டதை அடுத்து, இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் எஸ்.கார்த்திக் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார். “சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு கிரிக்கெட் சங்க கிளப்பில் கடந்த ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளச் சென்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரும், மூத்த வழக்கறிஞர்கள் இரண்டு பேரும் விழா அரங்கினுள் செல்ல இயலாதவாறு தடுத்து நிறுத்தப் பட்டுள்ளனர். அவர்கள் வேட்டி அணிந்து சென்றதாலேயே விழா அரங் கினுள் அனுமதிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

வேட்டி அணிய அனுமதி மறுக்கும் கிளப்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பதோடு, அந்த கிளப்களுக்கு வழங்கப்பட்ட லைசென்ஸ்களை ரத்து செய்யும்படி மாநில உள் துறைக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று கார்த்திக் தனது மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.ராஜேஸ்வரன், பி.என்.பிரகாஷ் ஆகியோரைக் கொண்ட அமர்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு பொது இடங் களுக்குள் நுழைவதற்கான (ஆடை மீதான தடையை நீக்குதல்) சட்டம் 2014 தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது குறித்து மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வந்தார். இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இதற்கு மேலும் இந்த விவகாரத்தில் விசாரணை தேவை யில்லை எனக் கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in