1,400 தற்காலிக பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஊதியம் கொடுப்பாணை: பள்ளிக் கல்வித் துறை வெளியீடு

1,400 தற்காலிக பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஊதியம் கொடுப்பாணை: பள்ளிக் கல்வித் துறை வெளியீடு
Updated on
1 min read

சென்னை: பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் 1,400 தற்காலிக பட்டதாரி ஆசிரியர்களுக்கு நவம்பர் மாதம் வரை ஊதியம் வழங்குவதற்கான கொடுப்பாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறைச் செயலர் சோ.மதுமதி அனைத்து மாவட்ட கருவூல கணக்கு அலுவலர்களுக்கு இன்று அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: ''அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 200 நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன. அந்த பள்ளிகளுக்கு தலா 6 பட்டதாரி ஆசிரியர் வீதம் 1,200, தலா ஒரு உடற்கல்வி ஆசிரியர் வீதம் 200 என மொத்தம் 1,400 பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் தோற்றுவிக்கப்பட்டன. இந்த பணியிடங்களுக்கான பணிக்காலம் கடந்த ஆகஸ்ட் மாதத்துடன் நிறைவு பெற்றது.

இதற்கிடையே, மேற்கண்ட ஆசிரியர் பணியிடங்களுக்கு தொடர் நீட்டிப்பு வழங்குவதற்கான கருத்துரு அரசின் பரிசீலனையில் உள்ளது. இதையடுத்து, பள்ளிக் கல்வித் துறை இயக்குநரின் பரிந்துரையை ஏற்று இந்த 1,400 தற்காலிக பட்டதாரி மற்றும் உடற்கல்வி ஆசிரியர் பணி இடங்களுக்கு வரும் நவம்பர் மாதம் வரை ஊதியம் வழங்குவதற்கான கொடுப்பாணை அளிக்கப்படுகிறது. எனவே, துறை சார்ந்த அலுவலர்கள் சம்பளப் பட்டியல் தாக்கல் செய்யும்போது அதை ஏற்று ஊதியம் வழங்கப்பட வேண்டும்'' என்று அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in