

சென்னை: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் முதல் மாநாடு அக்.27-ம் தேதி விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் நடக்கிறது.
இந்நிலையில், மாநாட்டு முன்னேற்பாடுகள் குறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்களுடன் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
இதில், தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். மாநாட்டில் பங்கேற்கும் தொண்டர்களின் எண்ணிக்கை, வாகனங்களின் எண்ணிக்கை, பாதுகாப்பு மற்றும்காவல்துறை அனுமதி பெறுவது உட்பட பல விஷயங்கள் இந்த கூட்டத்தில் ஆலோசனை செய்யப்படும் என கூறப்படுகிறது.