Published : 24 Sep 2024 05:26 AM
Last Updated : 24 Sep 2024 05:26 AM
சென்னை: சென்னையில் தமிழக பாஜகஒருங்கிணைப்பு குழு தலைவர்ஹெச்.ராஜா நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: வெளிநாடு சென்றுள்ள ராகுல்காந்தி இடஒதுக்கீடு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருக்கிறார். செப்.30-ம் தேதி தமிழகம் முழுவதும் இண்டியா கூட்டணியை எதிர்த்து, பாஜக எஸ்சி அணி, ஓபிசி அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
சீனாவுடன், காங்கிரஸ் கட்சிஒப்பந்தம் போட்டிருக்கிறது. ராகுல்காந்தி எதற்காக ரகசியமாக இந்திய விரோத சக்திகளைசந்திக்க வேண்டும். எனவே, ராகுல்காந்தியின் வெளிநாட்டு நிகழ்ச்சிகள் அனைத்தையும் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.இல்ஹான் ஓமருடன் காங்கிரஸ்கட்சிக்கு என்ன உறவு இருக்கிறது,இலங்கை அரசுடன் இந்தியா எப்போதும் நட்புறவை பேணும். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு சென்னை நுங்கம்பாக்கம் புஷ்பா நகரில் இலவச மருத்துவ முகாமை தொடங்கி வைத்த ஹெச்.ராஜா பிறகு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு செப்.17-ம் தேதி முதல் அக்.2-ம் தேதி வரை பல்வேறு பகுதிகளில் இலவச மருத்துவ முகாம் நடந்து வருகிறது. முதல்வர் காப்பீடு திட்டத்தில் ரூ.2 லட்சம் மட்டுமே வழங்கப்படுகிறது. ஆனால், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் வரை இன்சூரன்ஸ் கிடைக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் தமிழக பாஜக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மாநில துணை தலைவர் கரு.நாகராஜன், மாவட்ட தலைவர் விஜய் ஆனந்த் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT