

என்றைக்கும் கருணாநிதிதான் எனக்குத் தலைவர். மீண்டும் அவரை தமிழக முதல்வராக்கும் வகையில்தான் இயக்கப் பணியாற்றிக்கொண்டிருக்கிறோம் என திமுக எம்.பி. கே.பி.ராமலிங்கம் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம், கல்லூ ரணி ஊராட்சி அழகாபுரியில், திமுக எம்.பி. கே.பி.ராமலிங்கம் தொகுதி நிதி ஒதுக்கீட்டில் ரூ. 17 லட்சம் மதிப்பில் சமுதாயக் கூடம் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது.
கே.பி.ராமலிங்கம் எம்.பி. சமுதாயக்கூடத்தை ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்து பேசிய தாவது: என்னை எம்.பி. ஆக்கி நிதி ஒதுக்கீடு செய்யும் வகையில் வாய்ப்பளித்தவர் திமுக தலைவர் கருணாநிதிதான். உங்களின் வரிப் பணத்தில்தான் இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த தொகுதியைச் சேர்ந்த முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்திடம் பலமுறை மனு கொடுத்தும் நிதி ஒதுக்கவில்லை எனக் குறை சொன்னார்கள்.
அது தவறான போக்கு ஆகும். அவர் நிதி அமைச்சராக இருந்தபோதுதான் என் மூலம் நிதி ஒதுக்க உத்தரவிடப்பட்டது. எம்.பி.க்கள் ஒவ்வொருவரும் ஒரு கிராமத்தைத் தத்தெடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தின உரையில் தெரிவித்துள்ளார்.
அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் இந்த கல்லூரணி கிராமத்தை தத்தெடுப் பேன். மேலும் சுற்றுச்சுவர் கட்டுவதற்கும் நிதி ஒதுக்க உறுதி கூறுகிறேன் என்றார். அப்போது, செய்தியாளர்கள் திமுகவில் நிலவும் கோஷ்டி பூசல் குறித்து கேள்வி கேட்டனர்.
அதற்குப் பதிலளித்த கே.பி.ராமலிங்கம், என்றைக்கும் கருணா நிதிதான் எனக்குத் தலைவர். மீண்டும் அவரை முதல்வராக்கும் வகையில் இயக்கப் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம் என்றார்.